[10:55 am, 13/12/2024] +91 96777 06646: ஊட்டி. டிச. 14.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, காப்பி, மிளகு, மற்றும் மலை காய்கறிகள் பிரதான உற்பத்தி தொழிலாக இருக்கும் நிலையில் ஏராளமான பழ வகைகளும் விளைகின்றன. வருடத்தில் ஒருமுறை மலர் கண்காட்சி நடக்கும் போது குன்னூர் பகுதியில் பழ கண்காட்சியும் நடக்கும் அதில் நீலகிரியில் விளையும் பழ வகைகள் காட்சிக்கு வைக்கப்படும். நீலகிரி பலா, பேரி, ப்ளம்ஸ்,
கமலா ஆரஞ்சு, பீச், வாட்டர் ஆப்பிள், ஊட்டி ஆப்பிள் கொய்யா பம்ள மாஸ், நாவல், ஸ்ட்ராபெர்ரி, அவகோடா, ரம்புட்டான், பைனாப்பிள் போன்ற பழ வகைகள் அதிகமாக விளைவதோடு வெளியூர்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பழம் விளையும் பரவலாக மருத்துவ குணம் கொண்ட சீத்தாப் பழமும் அதிகமாக விளைகிறது. சீத்தாப்பழம் வெப்பமுள்ள நிலங்களிலும் அதிக குளிர் தன்மை உள்ள இடங்களிலும் விளைகிறது. இந்த சீத்தா பழங்களில் மாவு சீதா, ராம சீதா, முள் சீத்தா, மணல் சீத்தா ஆகிய இனங்கள் உள்ளன.
[10:55 am, 13/12/2024] +91 96777 06646: மணல் சீதா, முள் சீத்தா பழங்கள் அதிக மருத்துவ குணம் கொண்டவை கேன்சர் மற்றும் ஆஸ்துமா அலர்ஜிக்கு மிகுந்த பயனை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கால்சியம் இரும்பு சத்து மிகுதியாக உள்ளது. என கூறப்படுகிறது உடல் கொழுப்பை குறைக்கவும், அதிகமான எடையை குறைக்கவும் இதில் உள்ள மெக்னீசியம் சத்து பெரிதும் பயன்படுகிறது. மூட்டு வீக்கம், மற்றும் சர்க்கரை நோய்க்கும் உகந்த பழமாக சீத்தாப்பழம் பயன்படுகிறது.
தென் அமெரிக்க நாடுகளை பூர்வீகமாக கொண்ட சீத்தா பழங்களில் மாவு சீதா, ராமசீதா பழங்கள் கோத்தகிரி, கூக்கல் துறை, கொனவகரை, பர்ன்சைடு, குன்னூர் செல்லும் பகுதிகளிலும் தற்போது காய்த்து குலுங்குகிறது. உள்ளூர் பல சந்தைகளில் கிலோ 60, 70 ரூபாய்க்கு வாங்கி சீசனுக்கு ஏற்றார் போல் 100, 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.