தஞ்சாவூர். டிச. 31.
தஞ்சாவூரில் நடந்த உறவில்லாத பிராணிகளுக்கு உறவைத் தேடும் நிகழ்ச்சி 44 நாய்கள் 3 பூனை குட்டிகளை பொதுமக்கள் தத்தெடுத்தனர் .மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் மாதாகோட்டை சாலை யில் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் செயல்பட்டு வருகிறது இச்சங்கத்தின் சார்பில் செல்லப் பிராணிகளை தத்துகொடுக்கும் மற்றும் தத்து எடுக்கும் நிகழ்ச்சி யை நடைபெற்றது.
பிராணிகள் வதை தடுப்பு சங்க வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி க்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், பிராணிகள் வதை தடுப்பு சங்க அலுவலர் சாரா உறுப்பினர்கள் முகமது ரஃபி, எட்வர்டுயாகப்பா ,விஜயலட்சுமி பாரதி, சுற்றுலா வளர்ச்சி குழும செயலர் முத்துக்குமார் , ஆகியோர் முன்னிலை வகித்தனர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார்
இந்த நிகழ்ச்சியில் 49 செல்ல பிராணிகள் கொண்டுவரப்பட்டன அதில் 44 நாய்க்குட்டிகள் மற்றும் 3 பூனைக்குட்டிகள் பொதுமக்களிடம் தத்து பெறப்பட்டு, அது தத்து கொடுக்கப்பட்டன.நாய் தத்து எடுக்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார் தெருவில் அடிபட்டு காயம் அடைந்த நாய்க்குட்டி மிருகவதை தடுப்பு சங்கத்தின் பராமரிப்பில் இருந்து வந்தது. அதனை தத்து எடுத்துக் கொண்டார் .அதை தொடர்ந்து மற்றவர்களும் குட்டிகளை தத்து கொடுக்க, அதை தத்தெடுத்து வளர்க்க விரும்புவர் கள் வந்து பெற்றுக் கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கூறுகையில் உயர்தர நாய்களை வளர்ப்பதை விட நன்றி மிகுந்த பாதிப்பு இல்லாத செலவினங்களை குறைக்கும் நாட்டு தெருவோர நாய்களை தத்து எடுத்து வளர்க்க பொதுமக்கள் மக்களை ஊக்கப் படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாமும் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை அருகானுயிர் காப்பு சுற்றுச்சூழல் அறக்கட்டளை தலைவரும், பிராணிகள் வதை தடுப்பு சங்க ஒருங்கிணைப் பாளருமான சதீஷ்குமார் செய்திருந்தார்.