தருமபுரியில் தமிழ்நாடு மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறக்கட்டளை மற்றும் தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம்- தகடூர் இணைந்து நடத்தும் இரண்டாம் ஆண்டு கல்வி உதவித்தொகை( காசோலைகள்) வழங்கும் விழா நடைபெற்றது.தர்மபுரி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் துரைராஜ், பாலசுப்பிரமணியம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தருமபுரி, சரவணன் தலைவர் பாராலிம்பிக் சங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செண்பகவல்லி தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், கல்பனா சந்திரசேகர் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தின் பொருளாளர் வினோத்குமார் வரவேற்புரை ஆற்றினர். தடங்கம் சுப்பிரமணி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், நாட்டான் மாது நகரக் கழகச் செயலாளர், கோவிந்த், ரமேஷ், மாணிக்கம், குமரவேல், மகாலட்சுமி ரமேஷ், செந்தில் முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தின் செயலாளர் கோவிந்தராஜ் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் சங்க நிர்வாகிகள் மற்றும் தங்கமணி, முல்லைவேந்தன், ராஜா, ரேணுகா தேவி, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார்கள்.



