தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களுக்கு இரண்டாம் காலாண்டுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் இந்திய ரிசர்வ் வங்கி சென்னையின் உதவிப்பொது மேலாளர் ளு. தர்மராஜ், இந்தியன் வங்கி தருமபுரி மண்டலத்தின் மண்டல மேலாளர் திருமதி.பத்மாவதி ஸ்ரீகாந்த், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் ளு. ராமஜெயம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.



