நாகர்கோவில் ஆக 22
குமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூதப்பாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட செண்பகராமன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
அவர் வழங்கிய மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
செண்பகராமன் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அகஸ்தியர் காலனி, முத்துநகர், ஆதித்யன் புதூர், ஔவையார் காலனி,யோகேஸ்வரர் காலனி, சிதம்பரபுரம், பி சி காலனி ஆகிய இடத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச பட்டா கிடைக்கப்பெற்றது, அந்தப் பட்டாவை மாற்றி தற்போது இணைய வழி பட்டா கிடைக்கப்பெற்றது. ஆனால் சுமார்70 பேருக்கு இணைய வழி பட்ட கிடைக்கப்பெறவில்லை. அது போன்று செண்பகராமன் புதூர் ஊராட்சியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு ரப்பர் பூங்கா தொழிற்சாலை அமைப்பதற்கு என்று விவசாயிகளிடம் இருந்து 200 ஏக்கர் இடம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த இடத்தில் ரப்பர் பூங்கா அமைக்கப்படவில்லை. தற்போது இந்த இடத்தை தனி நபர் ஒருவர் கைவசம் வைத்துக் கொண்டு வேறு தொழில் செய்து வருகிறார். அரசு ரப்பர் பூங்கா வருவதற்கு என்று விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நிலத்தில் அரசு ரப்பர் பூங்கா வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியும், செண்பகராமன் புதூர் ஊராட்சியை சுற்றி அமைந்துள்ள குக் கிராமங்களில் சுமார் 500 வீடுகள் உள்ளது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வேலைகளுக்கும் , பள்ளி மற்றும் கல்லூரி செல்வதற்கும், மருத்துவமனை மற்றும் அத்தியாவசியமான தேவைகளுக்காக செல்ல சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து வந்து பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது இரவு ஆகி விடுவதால் அச்சத்தில் நடந்து செல்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அவ்வழியாக இயங்கும் அனைத்து பேருந்துகளும் இக் கிராமங்களுக்கு சென்று திரும்பி வர நடவடிக்கை எடுக்க வேண்டியும், வில்வ நேரி அருகில் அனுமதி இன்றி பல ஆண்டு காலமாக பன்னி பண்ணை நடத்தி வருவதால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருந்து வரும் சுமார் 1000 பேருக்கு மேல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தப் பஞ்சு பண்ணையில் இருந்து வரும் துர்நாற்றத்தால் சுவாச பிரச்சனை ஏற்படுவதுடன் பலவிதமான தொற்று நோய்கள் ஏற்படுகின்றன, இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்தில் வசித்து வருகின்றனர். இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகம் பலமுறை பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை எனவே மாவட்ட ஆட்சியர் நேரடியாக பண்றி பண்ணை இயங்கும் இடத்தை பார்வையிட்டு தொற்று நோயிலிருந்து இப்பகுதி மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்படியும், பிசி காலனியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்திருப்பதை அகற்றும் படியும், ஆதித்யன் புதூர் குளம் செல்லும் சாலை இலந்தை நகர் செல்லும் சாலை ஆகியவை பல வருடங்களாக பழுதடைந்து காணப்படுகிறது, எனவே அச்சாலையை சீரமைத்து தரும்படியும், ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் உள்ள பிரதான மழை நீர் வடிகால் ஓடையின் பக்கச்சுவர் உடைந்து காணப்படுவதால் மழை காலங்களில் கழிவு நீர் மற்றும் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில் உடனடியாக பக்கச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க கோரியும், செண்பகராமன் புதூர் ஊராட்சி 17 குக் கிராமம் அடங்கிய ஊராட்சி ஆகும் இதில் பழுதடைந்து எந்த நேரத்திலும் விழும் தருவாயில் 15 மின் கம்பங்கள் உள்ளது. இது சம்பந்தமாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றித் தரும்படியும், இந்திரா காலனியில் பகுதி நேர கடையாக நியாய விலை கடை இயங்கி வருகிறது இதில் சுமார் 400 குடும்ப அட்டைகள் உள்ளது. தற்போது பகுதி நேர கடையாக செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையை முழு நேர கடையாக மாற்றி தர கோரியும், கட்டளை குளம் கரையை சில நபர்கள் ஆக்கிரமித்து செங்கல் சூளை கட்டி வருகின்றனர். இதனால் கட்டளைக்குளம் கரை தற்போது சிறியதாகிவிட்டதால் எப்பொழுது வேண்டுமானாலும் குளம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது, எனவே கட்டளை குளத்தின் கரையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தரும்படியும், செண்பகராமன் புதூர் ஊராட்சி பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் 17 கிராமங்கள் அடங்கிய விவசாயிகள் அதிகமான கிராமமாகும். இங்கு கால்நடை வளர்ப்பவர்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர். கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால் மாதவலாயம் ஊராட்சியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே ஊராட்சி பகுதியில் ஒரு கால்நடை மருத்துவமனை அமைத்து தரும்படியும், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலேயே பிறப்பு இறப்பு பணி செய்யும் அலுவலகம் உள்ளது கடந்த மூன்று மாதமாக இந்த அலுவலகத்தில் அதிகாரி இல்லாததால் உடனடியாக இவ்வலுவலகத்தில் அதிகாரியை நியமித்து தரும்படியும், மேலும் 15/08/2024 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுப்பணித்துறை,நெடுஞ்சாலைத்துறை, நீர்வள ஆதாரத்துறை, வனத்துறை, பள்ளி கல்வித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை,சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு துறை,போக்குவரத்து துறை, வட்ட வழங்கல் அதிகாரி போன்றவர்கள் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை மேலே குறிப்பிட்ட பத்திற்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை எனவே இவர்கள் அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.