மதுரை அக்டோபர் 28,
மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள பால மந்திரம் மேல்நிலைப் பள்ளியில்
சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில்
மதுரை சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். மதுரை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்குமார் தலைமை வகித்தார் மேலும் மாணவர்களுக்கு சிறந்த அறிவுரைகளை வழங்கினார். மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இதுபோல நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்தி மென்மேலும் வளர வேண்டும் என்றும் வாழ்த்தினார் மேலும் மாணவர்களுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியாக பள்ளியின் தலைமை ஆசிரியை சாய் கீதா நன்றியுரை வழங்கினார்.