கிருஷ்ணகிரி- ஜூலை -28-கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு.அவர்கள் பேசும் பொழுது
மாணவர்களின் விஞ்ஞானி திறமையை வெளி உலகத்திற்கு கொண்டு வரும் நல்ல வாய்ப்பாக இக்கண்காட்சி உள்ளது. மேலும் இந்த முயற்சி மூலம் மாணவர்கள் திறன்களை வெளிக்கொண்டு வருவதுடன் அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் அமைகிறது. மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாள்தோறும் நாளிதழ்களை படிக்க வேண்டும். செய்திதாள் வாசிப்பதால் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள முடியும். புதுப்புது அறிவியல் படைப்புகளை ஆர்வத்துடன் தேடும் முயற்சியில் ஈடுபடவேண்டும். எதிர் கால உதகில் அறிவியல் சார்ந்த தொழில்களும் வேலைவாப்புகளும் இருக்கும் சூழலில் அதற்கு ஏற்றார் போல் மாணவர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
இக்காட்சியில் புவி வெப்பமாதலை தடுத்தல், இயற்கை வேளாண்மை நவீன இயந்திரங்கள் பயன்பாடு, ரோபோடிக் செயல்பாடுகள், எரிசக்தி, எரிவாயு பயன்பாடு அவற்றின் செயல் காட்சிகள், காற்று உந்து சக்தியில் இயங்கும் இயந்திரங்கள், ஒலிக்கருவிகள், ஒளி விளக்குகள், இயற்கை உணவுகள், பராம்பரிய உணவு, போன்ற 600 க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை ஓசூர், சூளகிரி, காவேரிப்பட்டிணம், ஊத்தங்களை சேர்ந்த 50 மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் மாணவர்கள் சிறு வயது முதலே நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நாம் எதிர்காலத்தில் எந்த முறையான வாழ்க்கை முறையை தேர்தெடுக்க போகிறோம் என்பதை அறிந்து அதற்கு தகுந்த மாதிரியான பாட திட்டங்களை தேர்ந்தெடுத்து அதற்காக முழு வீச்சில் உழைக்க வேண்டும். இந்த அறிவியல் கண்காட்சியில் காட்சி படுத்திய மாணவ மாணவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மாணவ மாணவியர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய பெருமக்களுக்கு எனது வாழ்த்துகளை
தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் .கே.எம்.சரயு
அவர்கள் தெரிவித்தார்.தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊத்தங்கரை வட்டம், காரப்பட்டு அரசு மாதிரி பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில்இரண்டாம் இடம் பிடித்த மாணவி செல்வி. எம். பூவிதா விற்கு வாழத்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து மாணவியின் பெற்றோர் .முருகேசன், . சந்தானலட்சுமி ஆகியோருக்கு சால்வை அணிவித்து தன் சொந்த பணத்திலிருந்து ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அதியமான் மகளிர் கல்லுாரி தாளாளர் .திருமால்முருகன், தொடக்க கல்வி அலுவலர் .சிவராமன், காரப்பட்டு அரசு மாதிரி பள்ளி தலைமையாசிரியர் .ஞானபண்டிதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .பாலாஜி, . மகேஸ்குமார், .தவமணி மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவியர்கள் கலந்துக்கொண்டனர்.