தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தடங்கம் ஊராட்சி, சேலம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கி .சாந்தி இன்று 20.5.2024 துவக்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்நிலையில் வனத்துறை ஊரக வளர்ச்சித் துறை நெடுஞ்சாலை துறை வருவாய்த்துறை அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அலுவலகம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களிலும் சாலையோரங்களிலும் மரக்கன்று நடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்
அதன் அடிப்படையில் இன்று வருவாய்த்துறை சார்பில் நல்லம்பள்ளி வட்டம் தடங்கம் ஊராட்சி சேலம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் மரக்கன்று நடும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி வட்டாட்சியர் பார்வதி வருவாய் ஆய்வாளர் முருகானந்தம் கிராம நிர்வாக அலுவலர் முனிசாமி தடங்கம் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்