மதுரை மாவட்ட உயர்நீதிமன்ற கிளை அருகில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 188 வது வார மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் பாண்டி முன்னிலை வகித்தார். ஆலோசகர் பிரபு வரவேற்றார். உறுப்பினர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். குழந்தைகள் நலினா, வெண்பா, ஹரிசரண், முத்தழகி, யோகலட்சுமி, தேவிகா, நிலாஸ்ரீ ஆகியோர் சுற்றுச்சூழல் குறித்து உரை நிகழ்த்தி நிகழ்வை தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக பாரத பிரதமர் அவர்களால் மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டு பெற்ற மதுரை மூலிகை ஆசிரியை சுபஸ்ரீ கலந்து கொண்டார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக மூலிகை ஆசிரியை சுபஸ்ரீ அவர்களுக்கு
வங்காரி மாத்தாய் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மரங்களின் அவசியம், சுற்றுச்சூழல், மூலிகை வகைகள் மற்றும் பயன்பாடுகள், உயரும் வெப்பநிலை ஆகியன குறித்து சுபஸ்ரீ சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்விற்கு தேவையான வேம்பு , புங்கை மரங்கள் மற்றும் வலைகளை பரமேஸ்வரன் வழங்கினார். விழாவில் நரசிங்கம் ஒன்றிய கவுன்சிலர் பிரசன்ன குமார், மதுரை ஸ்கூல் ஆஃப் டிராமா நிறுவனர் உமேஷ், ஆலோசகர்கள், உறுப்பினர்கள், தியாகராஜர் பள்ளி தமிழ் ஆசிரியர் கார்த்திக், சமூக ஆர்வலர் பாஸ்கரன், ஓகே சிவா, ஸ்டெல்லா மேரி, சியாமளா ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் மரங்கள் நடப்பட்டது. நிகழ்வில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரங்கள் நட்டனர். மாணவி ஜெயா நன்றி கூறினார்.