புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் அருகே புதுக்கோட்டை தஞ்சாவூர் நெடுஞ்சாலை ஓரங்களில் வனத்துறையின் சார்பில் பசுமை தமிழ்நாடு 2024 ஐ முன்னிட்டு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா வனச்சரக அலுவலர் மு.சதாசிவம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.



