ஈரோடு மே 14
வடலூர் தலைமை சமரச சுத்த சத்திய சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஈரோடு அருள் சித்தா கேர் வளாகததில் மாநிலத் தலைவர் அருள் நாகலிங்கம் தலைமையில் நடந்தது.
அப்போது அவர் பேசியதாவது,
வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மும் வள்ளல் பெருமானின் கொள்கைகளை அடிப்படை யாகக் கொண்ட இன்னும் சில உலகளாவிய அமைப்பு களும் இணைந்து சென்னை யில் மிகப் பிரமாண்ட மான முறையில் சுத்த சன்மா ர்க்க மாநாடு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இன் றைய சூழலில் சன்மார்க் கமே உலகின் அமைதியை நிலை நிறுத்தும் ஒப்பற்ற மார்க்கமாகும். உலகெங்கும் பரவி வரும் போர்ச் சூழலை முற்றிலுமாக ஒழித்து மனித ர்கள் மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளும் நல் வாழ்க்கை வாழ்வதற்கு வள்ளல் பெரு மானின் சன்மார்க்க கொள் கைகள் அவசியமான ஒன் றாகும்.
ஆகவே உலக அளவில் சன்மார்க்கத்தை மிகச் சிறப்பானதொரு முறையில் கொண்டு செல்வதற்கு இந்த சன்மார்க்க மாநாடு பயன்ப டும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல் வேறு மாநிலங்களில் இருந் தும், அமெரிக்கா,சிங்கப்பூர் மலேசியா, மொரிசியஸ் இ லங்கை, கனடா உள்ளிட்ட உலகெங்கும் பரவிக் கிடக் கும் சன்மார்க்க சான்றோர்சு ளும் இந்த மாநாட்டில் பங் கேற்க உள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு நிச்சயமாக சன்மார் க்க உலகில் மட்டுமல்லாது சாதாரண மக்களிடமும் ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்படுத் தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சென்னையில் மாபெரும் சன்மார்க்க மாநாடு நடத்து வது, சன்மார்க்க வழிபாட்டு நூல், வள்ளல் பெருமானின் ஆறாம் திருமுறை ஆகியவ ற்றை இல்லந்தோறும் அனைவருக்கும் கொண்டு செல்லும் பொருட்டு அதனை மலிவு விலையில் வழங்குவது உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சங்கத்தின் புதிய பொருளாளராக சேலம் மாவட்டத் தலைவர் அங்கப் பன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் மாநில துணைத்தலைவராக தர்மபுரி நஞ்சுண்டன் தேர்வு செய்யபட்டார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவி களும் வட லூர் தலைமைச் சங்கத்தின் வழியாக இயங்கி வரும் சம ரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை மூலமாக தஞ் சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தின் சன்மார்க்க சான்றிதழ் வகுப்பில் இணைந்திருக்கும் மேட்டூர் அரசு கலை அறிவி யல் கல்லூரி மாணவ மாணவிகள் 100 பேருக்கான கல்வி கட்டணம் ரூ 25000 வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் தமிழ் பல்க லைக்கழகத்தில் வள்ளலார் கடிதங்கள் என்னும் பெயரில் முனைவர் பட்ட ஆய்வை செய்து கொண்டிருக்கும் ராகவி பத்மநாபன் என் பவருக்கு தலைமைச் சங்கம் சார்பில் ரூபாய் 10,000, நாகப் பட்டினம் தமிழ் தூதன் மாணவிக்கு 10000 நெக மம் மாணவி ஒருவருக்கு ரூ 3000 வழங்கப்பட் டது. மற்றும் பல்வேறு சங்க ங்களுக்கு அரிசி மூட்டைக ளும் வழங்கப்பட்டது .
கூட்டத்தில் வடலூர் தலைமைச் சங்கத்தின் மாநி லத்தலைவர் அருள்நாகலிங்கம், மாநில பொதுச் செயலா ளர் டாக்டர் வெற்றிவேல், மாநில செயல் தலைவர் கோவை ராமதாஸ், மாநிலச் செயலாளர் காஞ்சிபுரம் வெங்கடேஷ், மாநிலதுணை தலைவர் செந்நெறி தண்ட பாணி ஆவடி ஜெயக்குமார் மழையூர் சதாசிவம், திரு வாரூர் வள்ளலார் தாசன், வடலூர் ராஜேந்திரன், ராதா கிருஷ்ணன், விழுப்புரம்.சௌ ந்தரராஜன், சத்தியமூர்த்தி, திருச்சி சண்முகையா, முத்து கார்த்திகேயன். நாமக்கல் மாவட்டத்தலைவர் சுகுமார், வெண்ணந்தூர் கந்தசா மி, தஞ்சாவூர் கண்ணபிரான் நெகமம் இராமலிங்கம் நாமக் கல் மாவட்ட தலைவர் சுகுமார் மாநில மகளிரணி நிர்வாகிகள் விசாலாட்சி. வாசுகி, பிரமிளா, சன்மார்க்க மன்ற ஆளுநர்கள் முனைவர் மஞ்சுளா, முனைவர் நாசங்கரராமன் உள்ளிட்ட அனைத்து மாவட்டத் தலைவர்கள் நிர்வாகிகள் பலர் இதில் கல ந்துகொண்டனர்.