செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேளவளம் பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் செங்குந்தர் சமுதாய முன்னேற்ற பேரவை சார்பாக ஐம்பெரும் விழா நடைபெற்றது இவ்விழாவில் கிளைச் சங்கத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஆராதனை விழா மற்றும் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் ஊக்க தொகைகள் வழங்கும் விழா மற்றும் தாய்மார்கள் மற்றும் குடும்பத்தவர்கள் போற்றும் விழா மற்றும் முத்தமிழ் முருகன் மாநாடு விருது மற்றும் அரசு விருதுகள் பெற்ற மா கா சுப்பிரமணியனுக்கு பாராட்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கைத்தறி கதிரவன் கே பி கே செல்வராஜ் அவர்கள் மாநில தலைவர் தலைமையேற்று நிகழ்ச்சி துவக்கப்பட்டது இந்நிகழ்வில் எம் ஆர் சுந்தரமூர்த்தி கிளைச் செயலாளர் அவர்கள் வரவேற்பு வழங்கினார் இந்நிகழ்ச்சியை பாண்டியன் கிளை துணைத் தலைவர் மற்றும் ரவிக்குமார் சங்கத்தணிக்கையாளர் மற்றும் எழில் குமார் சங்க துணைச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் மா. க. சுப்பிரமணியம் மேலவலம்பேட்டை செங்குந்தர் சமுதாய முன்னேற்ற பேரவை தலைவர் அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தனர் மேலும் இந்நிகழ்வில் நடராஜன் மாவட்டச் செயலாளர் எம் சண்முகம் கிளை பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் செங்குந்தர் சமுதாய முன்னேற்ற பேரவையின் மாநில தலைவர் கே பி கே செல்வராஜ் அவர்கள் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை அளித்து கௌரவிக்கப்பட்டனர் இந்நிகழ்வில் செங்குந்தர் சமுதாய முன்னேற்ற பேரவையின் அனைத்து பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்