சென்னை, செப்டம்பர் – 27 -இந்தியாவில் அதிகமாக நுகர்வோர் விரும்பும் சாம்சங், ஃபிளாக்ஷிப் கேலக்ஸி எஸ், எம் மற்றும் எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இதுவரை கண்டிராத விலைகளை அறிவித்துள்ளது.
கேலக்ஸி எஸ்-23 எஃப். இ அசல் விலை ரூ54, 999 உள்ள கேலக்ஸி எஸ்- 23 எஃப்.இ
ரூ 27,999- க்கு சலுகை விலையில் கிடைக்கும் .
அதேபோல் ரூ.74,999 க்கு விற்பனை செய்யப்படும்
கேலக்ஸி எஸ் -23 ஸ்மார்ட் போன் குறைந்த விலையாக ரூ.37,999 க்கு விற்பனைக்கு உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கேலக்ஸி எஸ்- 23 அல்ட்ரா, கேலக்ஸி எஸ் -23 மற்றும் கேலக்ஸி எஸ் -23 எஃப். இ உள்ளிட்ட கேலக்ஸி முதன்மை சாதனங்களில் கேலக்ஸி ஏ.ஐ அம்சங்களை வெளியிடுவதாக சாம்சங் அறிவித்தது.
இந்த குறிப்பிட்ட மொபைல்களில் ஏ.ஐ.இன் தொழில் நுட்பத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸியில் ஏ.ஐ அம்சங்களின் உள்ளீட்டால் கேலக்ஸி எஸ்-23 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்-23 மற்றும் கேலக்ஸி எஸ்-23 எஃப்.இ பயனர்கள் சர்க்கிள் டு சர்ச், லைவ் டிரான்ஸ்லேட் மற்றும் நோட் அசிஸ்ட் உள்ளிட்ட பல அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
கேலக்ஸி எஸ்-23 என்பது அனைத்து புதிய கேமரா அம்சங்களையும் கொண்ட ஒரு உன்னதமான சாதனமாகும்,
இதில் குறைந்த வெளிச்சத்தில் நைட்கிராஃபி திறன்கள், நம்பமுடியாத விவரங்கள் கொண்ட புகைப்படங்களுக்கான 50 எம்.பி அடாப்டிவ் பிக்சல் சென்சார் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது.