நாகர்கோவில் ஜூன் 18
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு கிளையின் சார்பாக தியாகத் திருநாள் (ஈதுல் அல்ஹா) தொழுகை அழகியமண்டபம், ஆக்ஸ்போர்ட் ஸ்கூல் திடலில் வைத்து நடைபெற்றது இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஆஷிக் கலந்து கொண்டு பெருநாள் உரையாற்றினார்.
தொழுகைக்கு பின்னர் மாவட்ட துணைச் செயலாளர் ஆஷிக் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :- இப்ராஹிம் நபி அவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த தியாகங்கள் தான் இந்த பெருநாளின் பல்வேறு நிகழ்வுகளிலும் ஹஜ் பிரயாணத்திலும் பிரதிபலிக்கிறது ,எனவே நபி இப்ராஹிம் (அலை) போன்று கொள்கை உறுதியோடு வாழ்வதற்கு உறுதி ஏற்க வேண்டும் , இப்பெருநாளின் ஒரு அங்கமாக குர்பானி பிராணியின் இறைச்சியை ஏழை எளிய மக்களுக்கும், சொந்த பந்தங்களும் வழங்கி இஸ்லாமியர்கள் மகிழ்வுறுகின்றனர் என்றும்
”நபி இப்ராஹிம் (அலை) ஒரு அழகிய முன் மாதிரி” எனும் வடிவில் இப்ராஹிம் நபி அவர்களின் கொள்கை உறுதியையும், சேவை மனப்பான்மையையும் அனைத்து இஸ்லாமியர்களும் பின்பற்றும் வகையில் 10 மாத தொடர் பிரச்சாரம் செய்வதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் நடைபெற்ற திடல் தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்களும் , பெண்களும் ,குழந்தைகளும், முதியோர்களும் கலந்து கொண்டனர், தொழுகையும் , பெருநாள் உரையும் முடிந்த பிறகு, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.