திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:ஜூலை:9, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் 25 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75000/- மதிப்பில் அதிநவீன படிக்கும் கருவி மற்றும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50000/- மதிப்பில் எழுத்துக்களை பெரிதாக்கி படிக்க உதவும் உருப்பெருக்கி என 33 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.07 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் வழங்கினார். உடன் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.