கன்னியாகுமரி, நவ.8
அஞ்சுகிராமம் அருகே பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு மாணவ, மாணவிகளின் நலன் கருதி ரூ. 6 இலட்சம் மதிப்பில் இரும்பிலான டெஸ்க் மற்றும் பெஞ்சுகளை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் கல்லூரி முதல்வரிடம் வழங்கி ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சரோஜா தலைமைதாங்கினார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர்ஜெஸீம், கவுன்சிலர்கள் இராஜ பாண்டியன் ராமச்சந்திரன் காமாட்சி விரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மேட்டுக்குடி முருகன், செயலாளர் வாரியூர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரோஸ் வரவேற்றார். கணிதவியல் பேராசிரியர் டாக்டர் ராஜேஸ்வரி வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு புதிய டெஸ்க் மற்றும் பெஞ்சுகளை கல்லூரிக்கு வழங்கி பேசியதாவது;
இக்கல்லூரியில் கடந்த முறை நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்ற போது, இங்கு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் படிப்பதற்கு ஏதுவாக போதுமான டெஸ்க் மற்றும் பெஞ்சுகள் இல்லாமல் இருக்கிறது. எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி எங்களது கல்விக்கு உதவிடும் வகையில் உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென தைரியமாக என்னிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த மாணவியின் கோரிக்கையினை, நிறைவேற்றும் வகையில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-2023-ன் கீழ் ரூ. 6 இலட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான 39 டெஸ்க் மற்றும் 39 பெஞ்சுகளை வாங்க நிதி ஒதுக்கீடு செய்து வாங்கப்பட்டு இக்கல்லூரிக்கு வழங்கியதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
ஒட்டு மொத்த மாணவ, மாணவிகளின் நலனுக்காக கோரிக்கை வைத்த அந்த மாணவியையும், அவரின் சமூக சிந்தனையையும் நான் பாராட்டுகிறேன். வருகிற 11-ம் தேதி கல்லூரி செமஸ்டர் தேர்வு நடைபெறுவதாக அறிந்தேன். மாணவ, மாணவிகள் நல்ல முறையில் படித்து, தேர்வு எழுதி 100 சதவீதம் தேர்ச்சி அடைய வாழ்த்தி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இதன் மூலம் இக்கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் பெருமையை தேடித் தர வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். டாக்டர் பழனி நன்றி கூறினார்.
போட்டோ புட் நோட்
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அஞ்சுகிராமம் பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு மாணவ, மாணவிகளின் நலன் கருதி ரூ. 6 இலட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான டெஸ்க் மற்றும் பெஞ்சுகளை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கல்லூரி முதல்வர் சரோஜாவிடம் வழங்கி ஒப்படைத்தார்.