கன்னியாகுமரி, நவ. 9:
குமரி மாவட்டம் கொட்டாரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணியை விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
கொட்டாரம் காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கையை ஏற்று மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் இந்தப் பணி தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு கொட்டாரம் பேரூராட்சி தலைவர் செல்வகனி தலைமை வகித்தார். அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலர் பா.பாபு, அகஸ்தீசுவரம் வட்டார காங்கிரஸ் தலைவர் சாம் சுரேஷ் குமார், கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தார். இதில், கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர் முத்தரசி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், கொட்டாரம் பேரூர் திமுக செயலர் எஸ்.வைகுண்டபெருமாள், மாவட்ட திமுக பிரதிநிதி ஜி.வினோத், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி.தாமஸ், செயலர் தெய்வப்பிரியம். மாவட்ட துணை தலைவர்கள் நாராயணன், வின்சென்ட், கொட்டாரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கிறிஸ்டோபர், இந்திரா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஏ.என்.ஆனந்தன், ஷனோ, ஜார்ஜ் ,பிரபு, இளங்கோ, லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.