ராமநாதபுரத்தில் ரோட்டரி கிளப் ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாடு காவேரி மருத்துவமனை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம்
மாவட்ட ஆளுநர் தேர்வு தினேஷ் பாபு துவக்கி வைத்தார்
ராமநாதபுரம், செப்.16-
ராமநாதபுரத்தில் ரோட்டரி கிளப் ஆப் ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாடு திருநெல்வேலி காவேரி மருத்துவமனை இணைந்து இலவச இருதய பரிசோதனை முகாம் நடத்தினர்.
ராமநாதபுரம் வேலு மாணிக்கம் டைணி டாட்ஸ் மழலையர் பள்ளியில் நடைபெற்ற இலவச இருதய பரிசோதனை முகாமை ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு தினேஷ் பாபு துவக்கி வைத்தார்.
இலவச முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உயரம், எடை, இசிஜி, எக்கோ, பிஎம்ஐ போன்ற மருத்துவ பரிசோதனைகள் சுமார் 175 நபர்களுக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஏற்பாடுகளை ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப் ராம்நாட் தலைவர் செங்குட்டுவன், செயலாளர் அருண்குமார், திட்ட இயக்குனர் டாக்டர் ராஜீவ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். முகாமில் முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, உதவி ஆளுநர் டாக்டர் ரம்யா தினேஷ் பாபு, தொழிலதிபர் சுகுமார், வேலுமாணிக்கம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் ராஜீவ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி கர்மவீரர் காமராஜர் இதய பாதுகாப்பு நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட நடமாடும் வாகனம் மூலம் இருதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வாகனம் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று இலவசமாக இருதயம் பரிசோதனை மேற்கொண்டு வருகிறது.