அரியலூர்,டிச;07
அரசியலமைப்பு சட்ட மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் அரியலூர் மாவட்டத்தில் செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நகரில் அமைந்துள்ள அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் காடுவெட்டியார் அவர்களின் மகனும் மாவீரன் மஞ்சள் படை நிறுவனத் தலைவருமான காடுவெட்டி ஜெ.குரு கனலரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அரியலூர் மாவட்ட செயலாளர் சூரியமணல் குமார் ஜெயங்கொண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ் , ஜெயங்கொண்டம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரித்திவிராஜ்,
செந்துறை ஒன்றிய பொறுப்பாளர்கள் கங்கை துறை,விஜயகாந்த், அரவிந்த், ராஜா, சதீஷ் , சரவணன் ,வினோத்,குரு ,பாரதி,வினோத் உள்ளிட்ட மஞ்சள் படை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்