போடி.
தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லமரத்துப்பட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது. போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லமரத்துப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா வேணுகோபால் தலைமையில் வெகு விமர்சியாக நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி பணிகள்,மேம்பாட்டுப் பணிகள் ஜல்ஜீவன் திட்டம் போன்ற பல்வேறு திட்ட பணிகள் குறித்து தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன மற்றும் ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை அரசு கௌரிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் ஊராட்சியில் பல வருடங்களாக கிராம பொது மக்களின் நலன் கருதி தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த பொன்னன் அவர்கள் பணி நிறைவு பெற்றார்.இதனை அடுத்து தொண்ணன் அவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம்,கிராம நல கமிட்டி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பொன்னாடை போத்தி நினைவு பரிசு கொடுத்து கௌரவப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து ஊராட்சியின் மகளிர் திட்டம் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்ற 62 மகளிர் குழுக்களுக்கும் தலைமை வகுத்து மகளிர் திட்டத்தின் முன்னோடியாக விளங்கும் இந்திராணி என்ற பெண்மணிக்கு பொன்னாடை மற்றும் நினைவு பரிசு கொடுத்து கவுரவிக்கப்பட்டது. இந்த கிராம சபை விழாவிற்கான ஏற்பாட்டினை ஊராட்சி மன்ற தலைவர் வனிதா வேணுகோபால் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள்,சிறப்பாக செய்திருந்தனர்.