கிருஷ்ணகிரி அக் 4: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் வெங்கடாபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தின விழாவை முன்னிட்டு செங்கல்தோப்பு கிராமத்தில் கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கே.ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு, புதிதாக வீடு, மின்சாரம், அனைவருக்கும் வீடு திட்டம், தமிழக முதல்வரின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்தது குறித்தும், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா பேசுகையில், பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து பயனடையுமாறும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தற்போது அரசு பள்ளி மாணவர்கள் சாதித்து வருவது குறித்தும், அரசு பள்ளியில் படிப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். வெங்கடாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.கே.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் மாதேஷ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சித்ரா சந்திரசேகர், ஒன்றிய குழு தலைவர் அம்சாராஜன், துணைத் தலைவர் சத்யராஜ், ஊராட்சி செயலாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன், பிரபாகரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள், பிற துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



