நாகர்கோவில், ஜூலை – 20,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் எதிரே மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கான தனியாக கழிப்பறை அமைந்துள்ளது. பல மாதங்களாக இந்த கழிப்பறைக்கு தண்ணீர் வசதியில்லாமல் துர்நாற்றம் வீசி வந்த நிலையில் தற்பொழுது யாரும் பயன்படுத்த முடியாத படி பூட்டி வைக்கப்பட்டுள்ளது கழிப்பறையை சுற்றிலும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர் இதனால் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாற்று திறனாளிகள் அலுவலக மேல் மாடியில் வைத்து நடைபெறுவது வழக்கம் இந்நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் வருவது வழக்கம் அது போன்று தினம் தினம் அங்கு அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகள் நிமித்தம் மாற்றுத்திறனாளிகள் அதிக பேர் வருகின்றனர். இந்நிலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைக்கு செல்ல முயற்சிக்கும்போது கழிப்பறை பயன்படுத்த முடியாமல் பூட்டி கிடப்பதால் மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாயுள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை மனதில் வைத்து உடனடியாக கழிவறைகளை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படியும் கழிவறை முன்பு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் முடியும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.