அஞ்சுகிராமம் மே 1
நாகர்கோவில் டூ அஞ்சகிராமம் தேசிய நெடுஞ்சாலையில் ஜேம்ஸ்டவுன் பகுதி அடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான பேருந்துகள்,டூ வீலர்கள் இப்பகுதியை கடந்து செல்கிறது. பள்ளி, மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதி.
இப்பகுதியில் இருந்து ரஜகிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு இவ்வழியாக தான் செல்லவேண்டும். எடைவ இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது தினம் நாட பெறும் நிகழ்வாக உள்ளது.
இந்த வருடத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு மனு அளித்தில் பேரில் தேசிய நெடுஞ்சாலயில் பெயின்ட் அடித்து தற்காலிகமாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனவே போர்க்கால நடவடிக்கை எடுத்து விபத்துக்கள் ஏற்படாமலும், உயிர்பலிகள் ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவெண்டுமென மாவட்ட கலெக்டரிடம் காந்தி ராஜ் மறு அளித்துள்ளார்