சிவகங்கை:மே:04
சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள சண்முகராஜா கலையரங்கில் அதிமுக சார்பில் மே – தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது . அதிமுக மாவட்டச் செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார் .
அப்போது அவர் பேசியதாவது:தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் மறைமுக விற்பனை அதிகரித்துவிட்டது . டாஸ்மாக்கில் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு ஊழல்கள் நடந்தேறிய வண்ணமே இருக்கிறது . மக்கள் திமுக ஆட்சி மீது அதிக வெறுப்பிலும் , கோபத்திலும் இருக்கிறார்கள் . தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமையப்போவது உறுதியாகியுள்ளது .
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளது . இதைப் பார்த்து ஏன் திமுக வேதனைப்படுகிறது இதில் அவர்களுக்கு என்ன கவலை. தமிழகத்தில் விலை வாசி உயர்வு என்பது எப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது . பொதுமக்கள் அதிக கஷ்டத்தில் படு பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள் . திமுக அரசு கொடுக்கும் மகளிர் உதவித் தொகை என்பது பெண்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை அதிமுக
கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வந்து சேர இருக்கின்றன . எனவே அதிமுக ஆட்சி அமைக்கப் போவது வெகு தூரத்தில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார் .
இதற்கு முன்னதாக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கே.சி.ஆனிமுத்து , முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் , தலைமைக் கழக பேச்சாளர் மைதீன் , அதிமுக மாவட்டச் செயலாளர் பி. ஆர். செந்தில்நாதன் உள்பட கட்சி நிர்வாகிகள் பேசினார்கள் . முடிவில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் அசோகன் நன்றி கூறினார் .