தஞ்சாவூர் ஜூன் 30
கோடை மழையால் 33 சதவீதத்தி ற்கு மேல் பாதிக்கப்பட்ட 188.65 எக்டேர் நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள் ளது என மாவட்ட ஆட்சித்தலைவ ர் தீபக்ஜேக்கப் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவ லகத்தில் விவசாயிகள் குறைதீர்க் கும் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சி த்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் தற்போது வரை 32,830 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட த்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் பயன் பெற விவசாயி கள் சிட்டா, அடங்கல் ஆகியவற்றை வாங்கி வேளாண் துறையிடம் வழங்கி, அத்திட்டத்தின் கீழ் பயன் பெற வேண்டும்.
மாவட்டத்தில் தூர் வாரும் பணி கள் பெரும்பாலும் முடிந்து விட்டது, இன்னும் 38 கிலோமீட்டர் தூரம் தான் நிலுவையில் உள்ளது. தூர் வாரப்பட்ட பகுதிகளில் பணியின் தன்மை குறித்து விளம்பர பலகை கள் வைக்கப்படும். குறுவை நெற் பயிருக்கு விவசாயிகள் ஏக்கருக்கு ரூபாய் 730 ஐ பிரிமியமாக செலுத் தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
மாவட்டத்தில் 437 ஊராட்சி குளங் கள் உள்ளது. இதில் 434 குளங்களி ல் மண் எடுத்து விவசாயிகள் விளைநிலங்களுக்கு வளப்படுத்தி க் கொள்ள கண்டறியப்பட்டுள்ளது எனவே மண் தேவைப்படும் விவசா யிகள் மற்றும் மண் பானைசெய் வோர் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த மே மாதம் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பெய்த கோடை மழையினால் 33 சதவீதத் துக்கு மேல் பாதிக்கப்பட்ட 188.65 எக்டேர் பரப்பளவிற்கு நிவாரணம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது விவசாயிகள் மாற்று பயிருக்கு செல்ல ஏதுவாக மாநில வேளாண் மை வளர்ச்சி திட்டம், தேசிய சமைய எண்ணெய் உற்பத்தி திட்டம் மூலம் மானிய விலையில் உளுந்து, நிலக் கடலை மற்றும் சோயா விதைகள் வேளாண்மை விரிவாக்க மையத் தில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
வேளாண்மை பொறியியல் துறை மூலமாக சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. சி பிரிவு வாய்க்கால் தூர்வாரும் பணிக்காக 299 கிலோமீட்டர் நீளம் மற்றும் டி பிரிவு வாய்க்கால்தூர்வாரும் பணி க்காக 68 கிலோமீட்டர் நீளமுள்ள என மொத்தம் 367 கிலோ மீட்டர் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளது .தற்போது வரை 316 கிலோ மீட்டர் நீளம் தூர்வாரப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 567.05 டன் பருத்தி ரூபாய்வும் 3.71 கோடி மதிப்பில் 3,646 விவசாயிகளிடமிரு ந்து ஒரு குவிண்டாலுக்கு சராசரி யாக ரூபாய் 6,500 என விற்பனை குழுவால் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது. கூட்டுறவு துறை மூலம் இந்த ஆண்டு ரூபாய் 585 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தஞ்சா வூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் 25ஆம் தேதி வரை ரூபாய் 22 கோடியே 84 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு 6,345 டன் உரங்கள் தற்போது இருப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்



