தஞ்சாவூர், அக். 21.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மிக அத்தியாவசிய பொருளான துவரம் பருப்பு வழங்குவதில் தட்டுப்பாடு உள்ளது. சிலருக்கு பருப்பு கிடைக்கிறது, பலருக்கு கிடைப்பதில்லை. இவர்களுக்கு மாற்று தேதியிட்டு பருப்பு வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்குகின்ற நேரத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பருப்பு தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்கவேண்டும். கடந்த பொங்கலின் போது பொங்கல் பரிசுவழங்குவதில் தரமற்ற
பொருட்களையும், பல்வேறு குளறுபடிக்கும் காரணமான நிறுவனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மீண்டும் அந்த நிறுவனங்களே அரசு பருப்பு கொள்முதல் செய்ய அனுமதியை வழங்கியிருப்பது கட்டணத்துக்குரி யது.ஊழல் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு அளித்துள்ள அனுமதியை திரும்பப் பெற வேண்டும், இனி ரேஷன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடின்றி, தொடர்ந்து கிடைக்க தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் தலைமைவகித்தார். மாவட்ட செயலாளர் அ.ரெ.முகிலன், மாநகர செயலாளர் தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். . ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி கள் பொதுமேடை ஒருங்கிணைப் பாளர் துரை.மதிவாணன், தமிழக மக்கள் புரட்சிகழகம்தலைவர் அரங்க. குணசேகரன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மாநில நிர்வாகிகள் தை. சேகர், சாக்கோட்டை ரோஸ்லின், ராஜா,வெண்ணிலா, குடியரசு. பொன்.குருமூர்த்தி, தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் விஜய ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் ரமிளா தமிழ்மாறன்,மைய மாவட்ட செயலாளர் சேவியர்,குடந்தை மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.ஜெயசங்கர், திருவாரூர் மாவட்ட செயலாளர்செருகைசுரேசு, மாவட்ட பொறுப்பாளர்கள் சுரை.திருமேனி, கே.ஆர்.சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..
.முடிவில் மாநகர தலைவர் எஸ்.ஏ.பி. சேவியர் நன்றி கூறினார்.