ஈரோடு ரங்கம் பாளையத்தில் டாக்டர் ஆர்.ஏ.என்.எம். கலை அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்வி நிறுவனம் ஈரோடு மாவட்டத்திலேயே குறைந்த கட்டணத்தில் தரமான கல் வியை வழங்கி வருகிறது. கடந்த 31 வருடங்களாக பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் முதலியார் கல்வி அறக்கட்டளை மூலம் மிகச் சிறந்த கல்வியை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. கல்லூரி செயலாளர் கே கே பாலுசாமி, தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் அறக்கட்டளை குழு சிறப்பான நிர்வாகத்தை அளித்து வருகிறது. கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ பழனியப்பன் தலைமையில் சிறந்த பேராசிரியர்களை கொண்டு கல்வி வழங்கப்படுகிறது.
இக்கல்லூரியில் 15 இளங்கலை, இரண்டு முதுகலை, ஒரு பிஹெச்டி
ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. இந்த கல்வி நிறுவனத்தில் நாக் பி பிளஸ் சான்றிதழ் நவீன கணினி மையம் கலையரங்கம் ஸ்மார்ட் வகுப்புகள் மல்டிமீடியா மையம் போன்ற பல வசதிகள் உள்ளன. யுபிஎஸ்சி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
கல்லூரிக்கு மிக அருகிலேயே அரசு வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சி துறை அலுவலகம் செயல்ப டுகிறது. எனவே அவ்வலுவகத்தில் செயல்படும் அனைத்து தேர் வாணைய பயிற்சிகளுக்கு மாண வர்கள் கலந்து கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 20க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த கல்வி ஆண்டில் மட்டும் 26 புகழ்பெற்ற நிறு வனங்கள் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி யுள்ளன.
16 முகாம்கள் மூலம் 219 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கடிதங்கள் வழங்கப் பட்டு 174 மாணவர்கள் வேலை பெற்றுள்ளனர். முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர் களுக்கு செங்குந்தர் அறக்கட்டளை மூலம் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.