இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையத்தில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், காரைக்குடி மண்டலம் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர்.சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் முன்னிலையில், BS6 ரக 7 புதிய பேருந்துகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் .செ.முருகேசன் அவர்கள் பங்கேற்றனர்.



