ஆகஸ்ட் -1
அகில பாரத இந்து மகா சபா சார்பில் வருகின்ற
10 .8 .2024 சனிக்கிழமை அன்று திருப்பூர் அனுப்பர்பாளையம் கருப்பராயன் கோவிலில் இருந்து ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் அமைந்துள்ள எம்பெருமான் ஸ்ரீராமருக்கு வெள்ளியில் ராமர் பாதம் எடுத்து செல்லும் நிகழ்ச்சி
வெகு சிறப்பாக நடைபெறுவதால் அனுப்பர்பாளையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பிளக்ஸ் வைப்பதற்கும் கொடி கட்டுவதற்கும் அனுமதி அளிக்குமாறு மாநில இளைஞரணி செயலாளர் திருப்பூர் மாவட்ட தலைவர் வல்லபை பாலா திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.