நாகர்கோவில் அக் 10
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அஞ்சல் வார விழா 2024 அக்டோபர் 7 முதல் 11 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று “FIT POST, FIT INDIA” என்ற தலைப்பில் கன்னியாகுமரி கோட்டக் கண்காணிப்பாளர் க. செந்தில்குமார் மேற்பார்வையில் பேரணி நடைபெற்றது. பேரணியானது நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி பாலமோர் ரோடு, மணிமேடை ஜங்ஷன், வேப்பமூடு ஜங்ஷன் வழியாக சென்று மறுபடியும் மணிமேடை ஜங்ஷன்,பாலமோர் ரோடு வழியாக நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் நிறைவு பெற்றது. நாகர்கோவில் முதன்மை தபால் அதிகாரி சுரேஷ், தலைமையில், கோட்ட, துணை கோட்ட, தலைமை தபால் நிலைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மேற்கூறிய தலைப்பில் பதாகைகளை ஏந்தி பேரணியில் அணிவகுத்து சென்றனர்.