தஞ்சாவூர், நவ.2- தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1039வது மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாவை ஒட்டி பந்த கால் முகூர்த்த விழா நடந்தது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு 1039 ஆவது சதய விழாவை முன்னிட்டு பெரிய கோயிலில் பந்தக்கால் முகூர்த்த விழா நடந்தது.
முன்னதாக பந்தக்காலிற்கு சந்தனம் தயிர் பால் திரவிய பொடி உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பந்தக்கல் நடப்பட்டது.
விழாவில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழா குழு தலைவர் து. செல்வம், துணைத் தலைவர் எஸ்.சி . மேத்தா, உறுப்பினர் ராமநாதன், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலர் மாதவன், வெற்றி தமிழர் பேரவை இரா. செழியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.