சங்கரன்கோவில். ஜூன்.17.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில், இன்று ஜூன் 17ம் தேதி திங்கள்கிழமை குருக்கள்பட்டியில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி விழா பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு வருகை தரும் கழக துணை பொது செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பிக்கு சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கவேலு இல்லம் முன்பு காலை 9 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது எனவும், இந்த வரவேற்பு நிகழ்வில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி தலைவர்கள், அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழகத்தினர் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.



