நாகர்கோவில். மே 31:
குமரி மாவட்டத்தில் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. சூறைக்காற்று காரணமாக நேற்று முன்தினம் மாலையில் இருந்து இரவு வரை 150 இடங்களில் மின்கம்பங்கள் சரிந்தது. மலையோர கிராமங்கள் இருளில் மூழ்கின.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளிலும் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. சூறைக்காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. 300க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. நேற்றும் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சூறைக்காற்று வீசியது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் சேதமடைந்தன. மலையோர கிராமங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் உடைந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் கிராமங்கள் இருளில் மூழ்கின. நகரப் பகுதிகளிலும் சூறைக்காற்றால் மரங்கள் முறிந்து விழுந்தது. மின் ஒயர்கள் அருந்ததால் நாகர்கோவிலில் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய பணியாளர்கள், தீயணைப்பு துறையினர் இணைந்து மரங்கள் மற்றும் மின் கம்பங்களை சரி செய்தனர். அதன் பின்னர் மின்வினியோகம் இருந்தது.
மாவட்டம் முழுவதும் நேற்று மிதமான மழை இருந்தது. மலை பகுதியில் மழை காரணமாக பெருஞ்சாணி அணைக்கான நீர்வரத்து உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 1088 கன அடி தண்ணீர் பெருஞ்சாணி அணைக்கு வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக நேற்று காலை அணைக்கு நீர்வரத்து உயர்ந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அனைக்கான நீர்வரத்து 1878 கன அடியாக உயர்ந்தது. பேச்சுப்பாறை அணைக்கு 1445 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53.1 அடியாக உயர்ந்துள்ளது. பேச்சுப்பறை அணை நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. சிற்றார் – 1 7.28, சிற்றார்- 2 7.38 அடியாக உள்ளன. பொய்கை 15.2 அடியாகவும், மாம்பழத்துறை யாறு 30.68 அடியாகவும் உள்ளது.
முக்கடல் அணை மைனஸ் 16.5 ஆகியாக உள்ளது. மழை இன்னும் இரு நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நேற்று காலையிலும் மாவட்டம் முழுவதும் மழை நீடித்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் பெய்த மழை காரணமாக அலுவலகம், மற்றும் கல்லூரிகளுக்கு சென்றவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.
திற்பரப்பு அறிவியல் குளிக்க தடை
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வி விதிக்கப்பட்டுள்ளது