தேனி செப் 29:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் இதயப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் புரட்டாசி சனிக்கிழமையையோட்டி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர் மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம் அதுவும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் விலகி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை நவக்கிரகங்களில் ஒன்றான புதனுக்கு உரிய மாதமும் புரட்டாசி தான் புதன் கிரகத்தின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு பெருமாளின் அம்சமாக கருதப்படும் புது உடைய வீடு கன்னி இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதம் ஆகும் ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கான சிறப்பு வழிபாடுகள்
பிரமோற்சவங்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன புதனுக்கு நட்பு கிரகம் சனி பகவான் இதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் பெருமாள் கோவில்களில் விசேஷமாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர் சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம் இதில் புரட்டாசி மாத சனிக்கிழமை க்கென ஒரு விசேஷம் இருக்கிறது புரட்டாசி சனிக்கிழமை யில் தான் சனி பகவான் அவதரித்தார் அதன் காரணமாக அதனால் ஏற்படும் கெடு பயன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது இதன்படி இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி போடிநாயக்கனூர் சீனிவாச பெருமாள் கோவில் அனுமந்தன்பட்டி அனுமந்தராய பெருமாள் கோவில் கோம்பை திருமுல்லைராய பெருமாள் கோவில் போடி சென்றாய பெருமாள் கோவில் கம்பம் ஸ்ரீ கம்பராய பெருமாள் திருக்கோவில் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு துளசி மாலை சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார் பெருமாள் கோவில்களில் அந்தந்த பகுதி எல்லைக்கு உட்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் பக்தர்களுக்கு சுவாமிக்கு அணிவித்த துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டன. கோவில் செயல் அலுவலர் அருணா தேவி மற்றும் கோவில் ஊழியர்கள் அர்ச்சகர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.