தருமபுரியில் தலித் விடுதலைக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்தில் சட்ட மேதை அம்பேத்கரை தரை குறைவாக பேசிய உள்துறை அமைச்சர் அமீத்ஷா வை கண்டித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தீ. நாகேந்திரன் மாவட்டச் செயலாளர் தலைமை தாங்கினார்.செ. சந்தோஷ் குமார் மாவட்ட துணைச் செயலாளர் முன்னிலை வகித்தார்.சி. ரஞ்சன் மாவட்ட பொருளாளர் வரவேற்புரையாற்றினார். எம். பி. செங்கோட்டையன் மாநில பொதுச் செயலாளர் , டி.சகுந்தலா தங்கராஜ் மாநில இணை பொது செயலாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். எம். சுரேஷ் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் நன்றியுரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ரவீன், அஜித்குமார், சிவனேசன், சின்னதுரை, பன்னீர்செல்வம், ஓங்காளி, அருண்குமார், வீராசாமி, அம்மு மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு உள்துறை அமைச்சர் அமீத் ஷாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட குழு சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் எஸ். கலைச்செல்வன் தலைமையில் பாராளுமன்றத்தில் டாக்டர். அம்பேத்கரை இழிவு படுத்தி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் எஸ். தேவராஜன், மாவட்ட துணை செயலாளர் கா.சி. தமிழ் குமரன் ,எம். மாதேஸ்வரன் மாநில குழு உறுப்பினர் கள் எஸ். சின்னசாமி, கமலா மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மாது, பெருமாள், சுப்ரமணி, நிர்வாகிகள் சிவலிங்கம், மாணிக்கம், மனோகரன், சாமிநாதன் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அமித்ஷா வுக்கு எதிராக முழக்கங்கள் இட்டனர்.