திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக
திண்டுக்கல் பேகம்பூர் பழைய போஸ்ட் ஆபீஸ் அருகில் உள்ள காயிதே மில்லத் திடலில் மத்திய அரசின் வக்பு திருத்த சட்டம் 2024 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின்
மாவட்ட தலைவர் K.ஷேக்பரீத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சரத்குமார், MJK மாவட்டச் செயலாளர் சர்புதீன், காங்கிரஸ் கட்சியின் மேற்கு பகுதி செயலாளர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் M.யாசர் அரபாத் வரவேற்புரை நிகழ்த்தினார்.இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பழனி M.I.பாரூக் அப்துல்லாஹ், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், மாநகர காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் அரபுமுகமது, மனித நேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் AMS.நஜீபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.அதில் பேசியதாவது, வக்பு வாரிய சொத்துக்களை ஆக்கிரமிக்க வழி வகுக்கும் வகையில் அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமான பாரபட்சமான விதிகளை கொண்டிருக்கும் வக்பு திருத்த மசோதா 2024, சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு அளித்துள்ள பல உரிமைகளை பறிக்கும் வகையிலும் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை பாரபட்சமாக கருதும் வகையிலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த சட்டத்திற்கு இஸ்லாமியர்கள் மற்றும் மதச்சார்பற்ற அனைத்து அமைப்புகளும், கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், இத்திருத்த சட்டத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மனிதநேய மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் பக்ருதீன் நன்றியுரை கூறினார்.