ராமநாதபுரம், ஏப்.21
நீட் தேர்வு குறித்து பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசை கண்டித்தும் நீட் தேர்வு அச்சத்தில் உயிரிழந்த 22 மாணவ மாணவிகள் ஆன்மா அமைதி அடைய வேண்டி அதிமுக மாணவரணி சார்பில் கண்ணீர் அஞ்சலி நடத்தி பொய் வாக்குறுதி வழங்கிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் திமுக., ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் படவில்லை.
திமுகவின் பொய் பிரசாரத்தை நம்பி வாக்களித்ததால் உயிரிழந்த மாணவ, மாணவியர் 22 பேரின் ஆன்மா அமைதி பெற வேண்டி அதிமுக மாணவர் அணி சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன் ஏப்.19 இரவு கண்ணீர் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் கே. செந்தில்குமார் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் எம் ஏ முனியசாமி, மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, அம்மா பேரவை துணைச் செயலாளர் முனியசாமி,
எம் ஜி ஆர் மன்ற துணைச்செயலாளர் சுந்தர பாண்டியன் ஆகியோர் பேசினர்.
மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன், மாவட்ட அவை தலைவர் சாமிநாதன், மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் நிறைகுளத்தான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் ஆனிமுத்து, ரத்தினம், தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல செயலாளர் சரவணக்குமார், மாவட்ட பொருளாளர் குமரவேல் மற்றும் அனைத்து அமைப்பு நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.