சென்னை ஈஞ்சம்பாக்கம் 194 வது வட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்101 பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு நிகழ்வை முன்னிட்டு
3101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
திமுக 194 வட்ட செயலாளர் குங்ஃபூ மாஸ்டர் கருணா ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்
194 வது வட்டத்தில்
பல்வேறு பள்ளியில் பயிலும் முதல் மூன்று இடங்கள் பிடித்த 300 மாணவர்களுக்கு தலா 3000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கினார்.
மேலும் ஊனமுற்றவர்களுக்கு சக்கர நாற்காலி பெண்களுக்கு தையல் இயந்திரம் சலவை தொழிலாளிகளுக்கு இஸ்திரி பெட்டி 3 ஆயிரம் பெண்களுக்கு புடவைகள் மாணவ, மாணவியர்களுக்கு புத்தக பை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லயன் ச.அரவிந்த் ரமேஷ், கிழக்கு பகுதி செயலாளர் மற்றும் 15 வது மண்டல குழுத் தலைவர் வி.இ.மதியழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாணவ மாணவிகள் உள்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.