மதுரை மே 17,
நான் முதல்வன் கல்லூரி கனவு மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி தமுக்கம் மைதானம் மதுரை மாநாட்டு மையத்தில் மதுரை மாநகராட்சியின் சார்பில் நான் முதல்வன் கல்லூரி கனவு மாநகராட்சி மாணவ மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், காவல் ஆணையர் முனைவர்.லோகநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரி பல்கலைக் கழக மாணவ, மாணவியர்களின் பயன்பெறும் வகையில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவித்து, உயர் கல்விக்கான வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுவதுடன் தமிழில் தனித்திறன் பெறவும். சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ள மதுரை மாநகராட்சி மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு விருப்பமான உயர்கல்வியை தேர்வு செய்ய உறுதுணை செய்திடும் நோக்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு” உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை மாநகராட்சியின் சார்பில் தமுக்கம் மைதானம் மதுரை மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகராட்சி பள்ளியை சார்ந்த சுமார் 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற நாவலர் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எம்.ரித்திகாஸ்ரீ மாணவியை பாராட்டி நினைவு பரிசினை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையர் ஆகியோர் வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்வில் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் குறித்து பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களான டாக்டர் ஜே.கார்த்திகேயன், முதல்வர், மங்கையர்க்கரசி கல்லூரி, மதுரை (பொறியியல்) ஏ.ஜாஸ்மின். முதல்வர், வேலம்மாள் மருத்துவ கல்லூரி, மதுரை (மருத்துவம் மற்றும் நர்சிங்), த
அய்யம்போஸ். வழக்கறிஞர் மாவட்ட நீதிமன்றம், மதுரை (சட்டம்), த
ஆர்.கலாவதி நிறுவனர். பிரபஞ்சர பவுண்டேசன் – (பட்டயகணக்கு) பேரா.ராஜா கோவிந்தசாமி, முன்னாள் முதல்வர் தியாகராசர் கலை அறிவியல் கல்லூரி, மதுரை (கலை மற்றும் அறிவியல்), எஸ்.ஆர்.இசக்கிமுத்து, துறை தலைவர், கிங் கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரி. மதுரை – (கேட்டரிங்), யி.சிவசங்கரி, பேராசிரியர் தமிழ்நாடு விவசாயக்கல்லூரி (விவசாயம்) முனைவர். பரிமளம், பேராசிரியர் சமூக சேவை. தமிழ்நாடு விவசாய கல்லூரி, மதுரை (விவசாயம்), எஸ்.நாகலிங்கம், I.R.S. உதவி ஆணையர் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை, மதுரை (விளையாட்டு மற்றும் பொது), சம்பத், வங்கி மேலாளர், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, (வங்கி கல்வி கடன்) திருக்கோஷ்டியூர் மணிகண்டன் (அரசு போட்டி தேர்வுகள்), பாலாஜி, தாசில்தார் பணி ஓய்வு (அரசு போட்டி தேர்வுகள்), தேன்மொழி, முதல்வர், அரசு மகளிர் பாலிடெக்னிக் மதுரை, ஜெயமணி, அரசு மகளிர் பாலிடெக்னிக் மதுரை ஆகியோர் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (வடக்கு) மதுகுமாரி,
தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ். கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் பார்த்தசாரதி, கோபு, ரெங்கராஜன், ராதா, செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, கல்வி அலுவலர் ரகுபதி. மக்கள் தொடர்பு அலுவலர் மகேஷ்வரன்,
செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் காமராஜ் உதவிப்பொறியாளர் .பொன்மணி. சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், கல்விப்பிரிவு கண்காணிப்பாளர் ரமேஷ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சண்முகதிருக்குமரன். கல்விப்பிரிவு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.