நாகர்கோவில் ஆக 20
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசுப்பள்ளி கலையரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட ஆங்கில கற்றல் பயிற்சி முகாமானது மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, மாணவ மாணவியர்களை பாராட்டி பேசுகையில்-
குமரி மாவட்டம் எழுத்தறிவு மற்றும் கல்வியறிவில் தமிழ்நாட்டிலேயே முதன்மை மாவட்டமாக விளங்கி வருகிறது. கல்வி தகுதிக்கேற்ப பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வழங்கி வருகிறது. நான் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த போது, படித்த இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கிட முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பலனாக, குமரி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றி வருகிறார்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். அந்த தயக்கத்தை மாற்றி, அவர்களும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இணையாக ஆங்கிலத்தில் சரளமாக படிக்க மற்றும் பேச வேண்டும் என்ற உயரிய நோக்கில் தனியார் அமைப்புகளின் பங்களிப்புடன் இதுபோன்ற பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி முகாமின் அடிப்படை நோக்கம் நம் அனைவரும் வாய்பாட்டினை எவ்வளவு எளிதாக கற்றுக்கொள்கிறோமோ, வழிமுறையில் ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதே
இன்று நடைபெற்ற பயிற்சி முகாமில் அரசுப்பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும்
மாணவியின் தாய் தன்னுடைய குழந்தையின் ஆங்கில புலமையினை பகிர்ந்து கொண்ட போது, உண்மையிலேயே பெருமையடைந்தேன். அதுபோன்று 7ம் வகுப்பு மாணவி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதை கேட்டபோது இந்த முகாமின் நோக்கம் நிறைவடைந்ததாக மகிழ்ச்சியடைகிறேன். இது போன்ற பயிற்சி முகாம்களை மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.