திருவாரூர் ஜனவரி 7,
திருவாரூர் மாவட்டம், ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள குடியிருப்புகளில் நியாய விலை கடை மூலம் பொங்கல் தொகுப்பாக அரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, முழு நீள கரும்பு ஆகியவை வழங்குவதற்காக பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டுவருவதனை மாவட்ட ஆட்சித்தலைவர்தி.சாருஸ்ரீ, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சித்ரா, வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.