ஜன:17
திருப்பூர் மாநகராட்சி ஆண்டிபாளையம் குளத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர்
தா. கிறிஸ்துவராஜ் அவர்களுடன் குடும்பத்தாருடன் வந்து பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.
பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் கலந்து கொண்ட கலெக்டர் கும்மியாட்ட குழுவினருடன் சேர்ந்து கும்மி பாட்டுக்கு கும்மி அடித்து ஆடி பாடி மகிழ்ந்தார்.
பொதுமக்களுடன் தனது குடும்பத்தாருடன் மாவட்ட கலெக்டர் படகு சவாரி செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா துறை
அலுவலர் அரவிந்த் குமார் மேயர் தினேஷ்குமார் துணை மேயர் பாலசுப்பிரமணியம், சாமலாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகமூர்த்தி கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மோகன். கார்த்திக் சுபத்ரா தேவி ஆனந்தன் திமுக மகளிர் அணி கலைச்செல்வி குளோபல் பூபதி திருப்பூர் மாநகராட்சி 39,வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி அய்யாசாமி மற்றும் பகுதி துணைச் செயலாளர் ராயப்பராஜ், வார்டு செயலாளர் முத்துக்குமாரசாமி, சமூக ஆர்வலர்கள் ஈ.பி.அ.சரவணன்
KAK. கிருஷ்ணசாமி உடுமலை சந்தோஷ் அப்போது சுற்றுலாத்துறை சார்பில் பெண்கள் பொங்கல் வைத்து தொடர்ந்து வள்ளி கும்மி, தம்பட்டம், திடும் ஆட்டம், மற்றும் சிலம்பாட்டம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.