கன்னியாகுமரி, ஜன. 5 –
பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பாண்டிச்சேரியில் இரண்டு நாட்கள் தேசிய அளவிலான தற்காப்பு மற்றும் விளையாட்டுப் போட்டி நடந்தது.
நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம், பரிசுகளை வழங்கினார். போட்டியினை டாக்டர் ஏபி கிருஷ்ணகுமார் ஒருங்கிணைத்தார்.
இப்போட்டியில் கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி ஆசிரியை சுபன்யா 70 கிலோ எடை பிரிவு மற்றும் ரைபிள் பிரிவில் பங்குபெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் துப்பாக்கி சுடுதல் அசோசியேஷன் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். தேசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்று உலக துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வருகின்ற 2026 ஆண்டு துபாயில் நடைபெற இருக்கும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் பங்கு பெற உள்ளார்.



