மார்த்தாண்டம், மே – 17.
களியல் அருகே கட்டச்சல் என்ற பகுதியில் நேற்று முன்தினம் சாலையோரத்தில் மூட்டைகளில் கட்டப்பட்ட கழிவுகளை மர்ம நபர்கள் வீசி சென்றனர். தகவல் அறிந்த பேரூராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்தில் சென்று பார்வையிட்டு, செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்க செயல் தலைவர் கடையாலுமூடு போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசாரின் விசாரணையில் களியல் பகுதியில் உள்ள ஆக்கர் கடையில் இருந்த கழிவுகளை கொண்டு வந்து வீசப்பட்டது தெரிய வந்தது. போலீசார் கடை உரிமையாளர் நகுலன் என்பவரை காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை நடத்தி அபராதம் வசூலிக்கப்பட்டது. இதை அடுத்து கழிவுகள் மீண்டும் ஆக்கர் கடை உரிமையாளர் நகுலன் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.