கம்பம்.
இந்தியா சுதந்திர போராட்ட தியாகி தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தேனி மாவட்டம் சார்பாக கம்பம் நகரில் காந்தி சிலை முன்பு மாவட்ட தலைவர் ஜி.எம். நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. காந்தி சிலைக்கு மாவட்டச் செயலாளர் எஸ். முகமது இப்ராஹிம் மாலை அணிவித்து உறுதிமொழி வாசித்தார். மாவட்ட பொருளாளர் ஜோசப் மாவட்ட துணை செயலாளர் அக்பர் சீனிவாசன் மாவட்ட துணை தலைவர் காஜாமைதீன், மாவட்ட குழு உறுப்பினர்கள் அமீர்கான், சலீம் கான், சேக் அப்துல்லா, ஐயப்பன், கணேசன், குமார், காஜா மைதீன், உட்பட பலர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாய் சகோதரத்துவத்துடன் மனிதநேயத்தை உயர்த்தி பிடித்து வாழும் வாழ்க்கை முறைக்கு உரியவர்கள் என்பதை உரக்கச் சொல்கிறோம் எனவும், எங்களை பிணைந்த கைகளை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையாய் அணி திரள்வோம் எனவும், சாதிகால் மதத்தால் இனத்தால் மக்களை தனித்தன்மைப்படுத்தி சுயலாபம் அடைய துடிக்கும் எவரையும் உறுதியுடன் எதிர்த்து நிற்போம் எனவும், வாழ்நாள் முழுவதும் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளில் அண்ணாரின் பெயரால் உறுதிமொழி ஏற்கிறோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்களும் முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.