பொள்ளாச்சி ஜூலை:30
பொள்ளாச்சியில் அப்துல்கலாம் ஐயாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பெடரேசன் ஆஃப் இன்டியன் என்ஜிஓஸ் அண்டு கியூமினிட்டி சர்வீசஸ் எஃப். எண். ஐ & ஈஸ்வரி அறக்கட்டளை சார்பாக எஃப். எண். ஐ கலாமின் பசுமை கனவு திட்டம் மூலமாக நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் உலக அமைதி தூதர் முனைவர் ஜி. எஸ் .விஜயகுமார் அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு சேர்மேன் உலக அமைதி தூதர் . எம்.டி .கனகாம்பாள் அவர்களின் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை ஈஸ்வரி அறக்கட்டளையின் நிறுவனர் ஈஸ்வரி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தார். மரக்கன்றுகளை சாலையோரங்களிலும், நெடுஞ்சாலை பகுதிகளிலும் நடப்பட்டது.