பொள்ளாச்சி அக்: 07
வாசவி கிளப் மற்றும் வாசவி வனிதா கிளப், தமிழ்நாடு ஆரிய வைசிய மகா சபா, தமிழ்நாடு ஆரிய வைசிய மகா சபா இளைஞர் அணி மற்றும் பொள்ளாச்சி தடகள சங்கம் சார்பில் மகாலிங்கபுரம் ரவுண்டானா அருகில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரத்தான் மற்றும் வாக்காதான் போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிஸ்டி சிங்க் அவர்கள் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் 18 வயது ஆண்கள் பிரிவை தமிழ்நாடு ஆரிய வைசிய மகா சபா தலைவர் ரமனசுப்ரமணியம் , துனை தலைவர் P. பிரபு, பொள்ளாச்சி செயலாளர்
M.குமார் , பொருளாளர் சுந்தர்ராகவன் ஆகியோர் துவக்கிவைத்தனர். 18 வயது பெண்கள் பிரிவை தமிழ்நாடு ஆரிய வைசிய மகா சபா இளைஞர் அணி துணை தலைவர் திலிப்குமார், மாநிலத் துணைச் செயலாளர் ஆதர்ஷ் , கோவை மாவட்டச் செயலாளர் தினேஷ் பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர். 10 வயதுக்கான பிரிவை கோவை மாவட்ட துணை தலைவர் பரத் பொள்ளாச்சி தலைவர் பாலாஜி, ராதா கிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆண்களுக்கான வாக்காதான் நடைப்பயிற்சி போட்டியினை வாசவி கிளப் வனிதா தலைவர் சுப்புலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் பொள்ளாச்சி அத்லெட்டிக் சங்கம் தலைவர் கமலக்கண்ணன், செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் 5 வயது பிரிவினையும் துவக்கி வைத்தனர். பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருந்திரனாக இப் போட்டியில் கலந்து கொண்டனர்.