தஞ்சாவூர். அக் 1
செல்லப்பிராணிகளுக்கு ஆண்டு தோறும் வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும். 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கே ரேபீஸ்நோய் பாதிப்பு அதிகம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கூறினார்.
தஞ்சாவூர் கால்நடை பன்முக மருத்துவமனையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உலக வெறி நோய் தின சிறப்பு தடுப்பூசி முகம் நடந்தது. முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்து, 25க்கு மேற்பட்ட செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணியையும் பார்வையிட்டார் பின்னர் அவர் கூறியதாவது:
வெறி நோய்கடிக்கான மருந்து கண்டுபிடித்து அறிவியல் அறிஞர் லூயி பாஸ்டரை கௌரவிக்கும் விதமாக 2007 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28 தேதி உலக வெறி நோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ரேப்டோ என்னும் குடும்பத்தைச் சார்ந்த ஒரு வைரஸ் வெறி நோய் க்கு காரணம் ஆகும். இது மனிதர் களிடமும் விலங்குகளிடம் இறப்பை ஏற்படுத்தக் கூடியது.
இது நாய் ,பூனை ,ஓநாய், நரி வவ்வால் போன்றவற்றின் உமிழ்நீரில் இருந்து பரவுகிறது இந்த விலங்குகள் மனிதர்களை கடிக்கும் போது ஏற்படும் காயத்தின் வழியாக வைரஸ் உடலுக்குள் சென்று பன்மடங்கு பெருகி நரம்பு மண்டலம் வழியாக மூளையை தாக்கும் ரேபிஸ் வைரசால் தாக்கப் பட்டு பாதிக்கப்பட்டதாக கருதப் படும் .விலங்குகள் கடித்து விட்டால் உடனடியாக நோய் தடுப்பூசி மற்றும் மருத்துவ நடவடிக்கை களை உடனே தொடங்க வேண்டும்.
நாய் கடித்த உடன் 5 தடுப்பூசி களில் 100 சதவீத நோயை தவிர்க் கலாம். காயம் கடுமையாக இருந்தால் 90 வது நாளில் 6வது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் .ரேபிஸ் நோயால் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனவே குழந்தைகளை நாய்களிட ம் கையாளும் முறை குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும். செல்லப்பிராணிகளுடன் விளையாட அனுமதிக்க கூடாது.
உலக அளவில் ரேபிஸ் நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60, ஆயிரம் பேர் இந்திய அளவில் 20, ஆயிரம் பேர் உயிரிழப்பில் 45 சதவீதம் இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் நிகழ்கிறது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 2030 ஆண்டுகளு க்குள் நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற குறிக்கோளை உலக சுகாதார நிறுவனம் முன் வைத்துள்ளது.
எனவே இந்த நோயின் கடுமை யை கருதி 3 மாத வயதுக்கு மேற்பட்ட நாய்களுக்கு ஆண்டு தோறும் தடுப்பூசி போட்டு நாய்க ளைபாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் .உலக வெறி நோய் தினத்தை யொட்டி தஞ்சாவூர் கால்நடை பன்முக மருத்துவமனை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ மனைகளிலும் கால்நடை மருதகங்களில் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட வயதுடைய நாய் பூனை உள்ளிட்ட செல்ல பிராணிக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரி ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கார்த்திகேயன் துணை இயக்குனர் பாஸ்கர் உதவி இயக்குனர்கள் சரவணன் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்