நாகர்கோவில் – நவ- 21,
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் தேசிய முற்போக்கு திராவிட கழக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
உலக புகழ்பெற்ற கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பக்தர்கள், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நிறுத்திவிட்டு கடற்கரை மற்றும் பகுதிகளை கண்டு ரசிப்பதும், அங்கு புனித நீராடுவதும் வழக்கம் .
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு ஒரு முக்கோண வடிவிலான ஒரு பூங்காவும் அந்த பூங்காவிற்கு அருகாமையில் வாகன நிறுத்தமும் இருந்தது. ஆனால் இன்றைக்கு மாவட்ட நிர்வாகமும் கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகமும் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் மக்கள் கருத்தை கேட்காமல் தான்தோன்றித்தனமாக பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் அந்த வாகன நிறுத்தும் இடத்தை இடித்து அந்த பகுதியில் பூங்காவை எளிதாக கட்டுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். அதற்கு உண்டான பணிகள் நடைபெற்று வருகிறது . அவ்வாறு அந்த வாகன நிறுத்தும் இடம் அங்கிருந்து மாற்றப்படும் ஆனால் கன்னியாகுமரிக்கு வருகிற சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் , வயது முதிர்ந்தவர்களும், கடற்கரைக்கும் திரிவேணி சங்கமத்திற்கும் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.ஆகவே பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகமும் பேரூராட்சி நிர்வாகமும் இந்த மக்கள் விரோத திட்டத்தை கைவிட்டு அந்த இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் அங்கேயே தொடர்ந்து நீடிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்றைக்கு இந்த மனுவை கொடுத்துள்ளோம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம் . முதல்வர் வருவது திருவள்ளுவர் சிலையை பார்வையிடுவதற்கு வருவதாக நாங்கள் கேள்விப்படுகிறோம் முதல்வர் வருவதற்கும் அங்கு இருக்கிற இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை அப்புறப்படுத்துவதற்கும் பூங்காவை விரிவாக்கம் செய்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைக்கு ஏதோ முதல்வரிடத்தில் பெயர் வாங்க வேண்டும் என்ற ஒரு அர்ப்ப ஆசையில் இந்த மாவட்ட ஆட்சித்தலைவர் பேரூராட்சி நிர்வாகத்தை வைத்து இந்த சட்ட விரோத செயல்களை மக்கள் விரோத செயல்களை அங்கே அரங்கேற்றி வருகிறார். என்பது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் குற்றச்சாட்டு மேலும் இது தொடருமேயானால் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மக்கள் நலனில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறது ஆகவே எங்களுடைய பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய ஆலோசனையை பெற்று விஜய் பிரபாகரனை அழைத்து வந்து மக்கள் நலன் கருதி மாபெரும் போராட்டத்தை தேசிய முற்போக்கு திராவிட கழகம் இந்த பகுதியில் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். என தேமுதிக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் சிவகுமார் நாகப்பன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து விட்டு வந்து செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.