நாகர்கோவில் – நவ – 19,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தில் தவறாக திட்டமிட்டு கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தில் 2013 முதல் 2022 வரை நுழைவாயிலில் கடல் சீற்றத்தால் அகப்பட்டு உயிரிழந்த 11 மீனவ குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் வீட்டில் ஒரு நபருக்கு அரசு வேலை வேண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் தேவகி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் தவறாக திட்டமிட்டு கட்டப்பட்ட மீன்பிடித் துறைமுகத்தில் 2013 முதல் 2022-ம் ஆண்டு வரை நுழைவாயிலில் கடல் சீற்றத்தால் அகப்பட்டு உயிரிழந்த குடும்பங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் உள்ளவர்கள் . இறந்தவர்களின் வருமானத்தினை நம்பி தான் இந்த குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருந்தது. இப்போது அவர்கள் இறந்த காரணத்தினால் இந்த குடும்பங்கள் தற்போது வாழ்வாதாரம் இன்றி மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வறிய நிலையில் வாழ வழியில்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரையிலும் எந்தவிதமான இழப்பீட்டு தொகையும் கிடைக்கவில்லை. ஆகவே இவர்களின் ஏழ்மை நிலையினை கருத்தில் கொண்டு இழப்பீட்டு தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிடுமாறு அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. உடன் உயிரிழந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர் .